கணவரை நாயாக கட்டி இழுத்துச்சென்ற மனைவி… காரணம் என்னனு தெரியுமா?

Viral

ஊரடங்கில் இருந்து தப்பிக்க தனது கணவனை நாய்

என கூறி, வாக்கிங் அழைத்துச்சென்ற பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.உலகம் முழுவதும் தற்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம் குறைவில்லை. பெரும்பாலான நாடுகளில் இரண்டாம்கட்ட கொரோனா அலை வீசிவருகிறது. இந்நிலையில் கனடாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துவருவதால் அங்கு இரண்டாம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 8 மணியில் இருந்து காலை 5 மணிவரை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லப்பிராணிகளை வெளியே அழைத்துச்செல்ல இந்த நேரங்களில் தடை இல்லை என சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடாவின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஊரடங்கு அமலில் இருக்கும் இரவு நேரத்தில் வெளியே செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்காக அவர் போட்ட திட்டம்தான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆம், ஊரடங்கு சட்டத்தில் இருந்து தப்பிக்க, தனது கணவனின் கழுத்தில் நாய்களை கட்ட பயன்படும் கயிறு ஒன்றை கட்டி, தனது கணவனை நாய் போல நடக்க கூறி, அவரை அழைத்து சென்றுள்ளார்.

இதனை பார்த்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர் தான் ஒரு நாய்யைத்தான் அழைத்து செல்வதாக கூறி தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக அந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு போலீசார் சுமார் 3000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *