கடந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அவருடைய பேச்சு, காமெடி ஆகியவற்றுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைத் தொடர்ந்து திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் சாண்டி. அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ரேஷ்மா, ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் சாண்டியுடன் நடித்து வருகிறார்கள்.
டான்ஸ் மாஸ்டர் சாண்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடன அமைப்பாளராக இருந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாடியும் மீசையுமாக புகை பிடித்தவாறு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை மிரட்டியிருந்தார்.
தற்போது அவரின் இரண்டாவது மனைவியுடன் ஜோடியாக சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், வாழ்வில் எனது பக்கபலமாக இருந்து, இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமாகப் பங்கெடுத்துக் கொண்டு என்னை வழி நடத்துபவள் என் கண்ணம்மா என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது இன்ப அ தி ர்ச்சியுள்ளனர். சாண்டியின் மனைவி நடிகைகளையும் மிஞ்சி விடும் அளவு மாஸாக உள்ளார்.