திருமதி செல்வம் தொடரில் நடித்த நடிகர் என்ன ஆனார் தெரியுமா..? இப்பொது என்ன வேலை செய்கிறார் பார்த்தீர்களா

Cinema

வெள்ளித்திரையில் அந்த காலத்தில் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் பல நடிகர்கள் மக்கள் மனதில் அந்த படங்களை பார்க்கும் பொது மட்டுமே நினைவில் வருகிறார்கள். அதை தொடர்ந்து அவர்களை பற்றி மக்களும் சரி சினிமா வட்டாரங்களும் சரி நினைவில் வைத்து கொள்வதில்லை. இந்நிலையில் அந்த சிறு கதாபாத்திரங்களில் நடித்த பல நடிகர்கள் தற்போது சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் இல்லாமலே போ விடுகின்றனர். இந்த வகையில் பிரபல இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்கிய முஸ்தபா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜெயமணி. அந்த படத்தில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் பலத்த வரவேற்பை பெற்றவர்.

மேலும் இதை தொடர்ந்து இவர் தமிழில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் நாடக துறையில் இருந்த இவர் அதன் மூலம் தனது தேர்ந்த நடிப்பால் மக்களை வெகுவாக கவர்ந்தார். இவர் அதிதி, இளம் காதல், சுட்ட கதை போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் இவரை மக்களுக்கு அடையாளம் காட்டியது என்னவோ சின்னத்திரை தொடர்கள் தான்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களான மெட்டி ஒலி, கல்யாண பரிசு, கந்தன் கருணை போன்ற பல முன்னணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனாவின் மாமனார் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். மேலும் தொடர்களில் நடிப்பதை தொடர்ந்து ஒரு படத்தை இயக்கியும் உள்ளார்.

நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இலக்கணம் இல்லா காதல் எனும் படத்தையும் இயக்கியதோடு அந்த படத்தின் மூலம் சாதி பிளவுகளுக்கும் சாதி அரசியலுக்கும் எதிராக வலுவான கருத்தையும் அந்த படத்தின் மூலம் சொல்லி இருந்தார். இந்நிலையில் இவர் இதை எல்லாம் விடுத்து தற்போது ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல் யூடுப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளை விளக்கி வருகிறார். மனமே மௌனமாய் இரு எனும் அந்த சேனல் மூலம் மக்களிடையே நல்ல கருத்துகளை விதைத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *