அத்தை மகள்கள் 2 பேரையும் காதலித்து ஒரே நேரத்தில் மணந்துகொண்ட இளைஞர்! எங்கு தெரியுமா?

Cinema

இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் தனது அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணி ஆகியோரை ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை தொடர்பு கொண்டு காதல் வலை வீசி இருவரையும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் மண்டலம் கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன்.ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார்.பிறகு அர்ஜுன் தனது செல்போன் மூலம் தனது அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணி ஆகியோரை ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளார்.

இந்நிலையில் இரண்டு குடும்பத்தாருக்கும் இந்த முக்கோன காதல் விளைவின்கண் விவகாரம் தெரிந்த நிலையில் மூன்று குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இரண்டு அத்தை மகள்களும் பிடிவாதமாக அர்ஜுனனை மணக்க ஆசைப்பட்டதால் ஆதிவாசிகளான அவர்களது பாரம்பரியமான வாழ்க்கை முறையை மாற்றி முதல் முறையாக இரு பெண்களையும் ஒரே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து இவர்களது திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மணமகளுக்கு தாலி கட்டிய அவர் தற்போது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *