முழுகவச உடையில் நடிகை மீனா… வியர்வையைக் கூட துடைக்க முடியாமல் பட்ட க ஷ்டம் அட நம்ம மீனாவுக்கு என்னாச்சு!!

Cinema

நாடு முழுவதும் கொ ரோ னா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சில தளர்வுகளுடன் மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.இந்த நிலையில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் துவங்கியது. இதில் கலந்து கொள்ள நடிகை மீனா சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அவர் கொ ரோ னாவிலிருந்து தற்காத்துக் கொள்ள பா து காப்பு உடை அணிந்து சென்றுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர் நான் விண்வெளிக்குச் செல்வதுபோல இருந்தாலும், நான் போருக்குச் செல்வதைப் போலதான் உணர்கிறேன். 2 மாதங்களுக்குப் பிறகு பயணம் செய்கிறேன். விமான நிலையம் மிகவும் அமைதியாகவும், ஆள் அரவமற்று வெறிச்சோடி காணப்பட்டது. இது மிகவும் வசதியற்ற ஆடை.

அது குளிர்ந்த வானிலை மற்றும் ஏசி இருந்த போதும் மிகவும் வெப்பமாகவும், இறுக்கமாகவும் அதிகளவு வியர்வையை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. முகத்தைக்கூட துடைக்க முடியவில்லை. இரவு பகலாக இந்த உடையில் இருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *