திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய தெருவாசி ஒருவரது திறமை இணையத்தில் பத்து லட்சம் பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஊர் திருவிழா ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அப்போது உழைத்து வியர்வை விறு, விறுக்க நிற்கும் அப்பகுதி வாசி ஒருவர் காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற முக்காப்ல பாடலுக்கு நடனம் ஆடுகிறார். மேடை கூட இல்லை. சமதளப்பரப்பில் இருந்து செம ஆட்டம் போடுகிறார் அந்த வாலிபர்.
அப்போது அங்கு இருப்பவர்கள் அவரை ஊக்குவிக்கும் வகையில் பணம் கொடுக்கிறார்கள். அதை கூட கையில் வாங்காமல் செம ஆட்டம் போடுகிறார். இந்த சாலையோர ஏழைக் கூலித் தொழிலாளியின் அசாத்திய நடனத்திறமையைப் பார்த்தவர்கள், பிரபுதேவாவையே மிஞ்சிட்டீங்களே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.