41 ஆண்டுகளுக்கு முன் த த்து கொடுக்கப்பட்ட மகனை சந்தித்த தாய் !! மொழி புரியாமல் ப ரிமாறிய பாசம் !! நெகிழ்ச்சி சம்பவம் !!

Cinema

40 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து கொடுத்த பெற்றோரை தேடி அ லைந்த டென்மார்க் மகன் தற்போது தாயைக் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்த நிகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி, தனலட்சுமி தம்பதிகளின் மகன்கள் டேனியல் ராஜன் மற்றும் டேவிட் சாந்த குமார். குடும்ப வருமையின் காரணமாக கடந்த 1979ம் ஆண்டு சென்னைக்கு குடியெர்ந்த தம்பதி பல்லாவரத்தில் உள்ள காப்பகத்தில் இரண்டு மகன்களையும் சேர்த்துள்ளனர்.இதனையடுத்து குறித்த இரண்டு பேரையும் டென்மார்க்கை சேர்ந்த தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். தனது மகனின் சிறுவயது புகைப்படத்தினை வைத்து கலியமூர்த்தி தம்பதிகள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் டேவிட் தனது தாயும், தானும் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தினை வைத்துக்கொண்டு இந்தியாவில் பல இடங்களில் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் தத்தெடுத்துச் சென்ற குடும்பத்தினர் டேவிட் சாந்த குமார் என்ற பெயரை டேவிட் கில்டென்டல் என்று மாற்றியதுடன் மகனை நன்றாக படிக்க வைத்து அவரை பங்கு சந்தை நிறுவனத்தில் வேலைக்கும் அமர்த்தியுள்ளனர்.
டேவிட் திருமணம் செய்து இரண்டு மகள்களுடன் டென்மார்க்கில் வசித்து வந்த நிலையில், சென்னையில் தனது நண்பர் ஒருவரை காண்பதற்கு வந்துள்ளார். வந்த இடத்தில் தனது உருவஅமைப்பு தமிழர்கள் போல் இருப்பதை உணர்ந்த டேவிட் தனது வளர்ப்பு பெற்றோரிடம் விசாரித்த பின்பு உண்மை தெரியவே, இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இந்தியா வந்த பின்பே தனது அண்ணனும் டென்மார்கில் தான் தத்துகொடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் அறிந்த டேவிட் இரண்டு பேரை தேடி அ லைந்ததுடன் கையில் இருந்த புகைப்படத்தினையும் வெளியிட்டிருந்தார்.
தனது அண்ணனைக் கண்டுபிடித்த நிலையில் தற்போது தனது தாயினைக் கண்டுபிடித்த டேவிட், பாசத்தில் க ண்ணீர் மல்க கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டுள்ளது காண்பவர்களின் கண்களை குளமாக்கியுள்ளது. மொழி புரியாமல் தாயும், மகனும் பேசிய உணர்ச்சிப்பூர்வமான காட்சியினை அக்கம்பக்கத்தினர் கண்டு கண் கலங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *