கடைசி நேரத்தில் நின்றுபோன திருமணம்! மீண்டும் ராம்கியை மணந்தது எப்படி? இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் வாழ்க்கை பாதை

Cinema

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து பின்னர் குணச்சித்திர நடிகையாக மாறியவர் நிரோஷா.
இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார்.இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். பல பிரச்சினைகளை கடந்தே இவர்கள் வாழ்வில் இணைந்தார்கள்.இது குறித்து நிரோஷா முன்னர் அளித்த பேட்டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்களில் படித்தேன்.சினிமாவுக்கு வந்த பின்னர் செந்தூரப்பூவே படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய சண்டை நடக்கும். அவர் என்னைத் தண்ணியில இருந்து தூக்கும் சீன்ல, கமல் சார்கூட என்கிட்ட சொல்லிட்டுதான் மேல கைவைப்பார்.

நீங்க உங்க இஷ்டத்துக்குக் கைவைக்கிறீங்க என அவரைத் திட்டிட்டேன்.ஒருமுறை படப்பிடிப்பில், எதிர்பாராத விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான் சிக்கிக்க, கொஞ்சம் விட்டிருந்தாலும் நசுங்கியிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னைக் காப்பாத்தினார். பிறகு, மருத்துவமனைக்கு போகும் போது என் கை மீது அவர் கையை வைத்து நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார். அப்போது தான், என் மனதை அவரிடம் பறிகொடுத்தேன்.

பிறகு சண்டைகள் நீங்கி, ஒருத்தரை இன்னொருத்தர் தேட ஆரம்பிச்சு, காதலர்களானோம்.
எங்கள் காதலுக்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு. சினிமா நபரைக் கல்யாணம் செய்ய கூடாது என வீட்டில் உறுதியாக சொல்லி விட்டனர். அவருடன் நான் பழகுறதைத் தடுக்க, என் அம்மா அல்லது அண்ணன் எப்போதும் பக்கத்துலேயே இருப்பாங்க. எங்க வீட்டுல எல்லோரும் இரவு தூங்கின பிறகு, லேண்ட்லைன் போன்ல அவர்கிட்ட ரகசியமாக பேசுவேன். இப்படித்தான் எங்க காதல் வளர்ந்துச்சு.

நிறைய பிரச்னைகளுக்குப் பிறகு 1996-ல், எங்க கல்யாணத்துக்கு என் வீட்டில் ஒப்புக்கிட்டாங்க. கடைசிநேரத்தில் எங்கள் கல்யாணம் நின்றுவிட்டதுநான் நடிக்கவும் வீட்டில் தடைபோட்டுட்டாங்க. என்னைக் கட்டாயப்படுத்தி இலங்கைக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஆறு மாதங்கள் அங்கேயிருந்தேன். ஒருநாள் யாருக்கும் தெரியாம பாஸ்போர்ட்டை எடுத்துக்கிட்டு, எப்படியோ தப்பிச்சு சென்னை வந்துட்டேன்.

பிறகு பிரச்சினை காவல் நிலையத்துக்கு போனது. நான் அவர்கூட போய், 2 வருஷங்கள் இருந்தேன். அந்தக் கோ ப த்தில் என் வீட்டார் எங்களிடம் பேசவேயில்லை. அந்த சமயத்தில் நான் நடிக்கவுமில்லை. பிறகு, என் வீட்டார் சமாதானமாகி, 1998-ம் ஆண்டு எங்கள் திருமணம் நடந்தது என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *