நகைசுவை நடிகர் சுப்பையா என்ன ஆனார் தெரியுமா..? அவருக்கு இப்படி ஒரு நிலமையா…? முழுவிவரம் உள்ளே..!

Cinema

கருப்பு சுப்பையா என்றவுடன் நம் நினைவுக்கு ஒரு நகைச்சுவை காட்சி வந்து நிற்கும். ஈயம் பூச வேண்டும் என கவுண்டமணியிடம் வந்து நிற்கும் மனிதருக்கு உடல் முழுவதும் ஈயம் பூசி அனுப்புவார் கவுண்டமணி. அந்த கருப்பு சுப்பையாவின் கடைசிகாலம் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன், செந்திலுக்கு ஈடுகொடுத்து அதிக படங்களில் நடித்தவர் கருப்பு சுப்பையா. கருப்பாக இருந்ததால் கருப்பு சுப்பையாவான இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டத்தின் திருமங்கலம். கவுண்டமணியோடு 80 படங்களில் நடித்திருக்கிறார்.


பெரியமருது, ஜல்லிக்கட்டுக்காளை, கட்டபொம்மன், செந்தூரப்பூவே, பட்டத்துராணி என இவர் நடித்த காமெடிகள் இந்த படங்களில் பெரிதும் பேசப்பட்டன. பெரியமருது படத்தில் ‘’ஈயம் பூசும் கேரக்டர்” இவர் நடிப்பில் இன்று பார்த்தாலும் வயிறு வலிக்கச் சிரிக்கவைக்கும். ஆனால் கருப்பு சுப்பையாவின் கடைசிகாலம் மிகவும் சோகமாகவே நகர்ந்தது. போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் இன்றி தவித்திருக்கிறார்.


கடைசி காலத்தில் கூட இருந்து கவனிக்கக் கூட ஆள்கள் இன்றி மனம் உடைந்து போய் காணபட்டார் கருப்பு சுப்பையா. 2013ல் கவனிக்க ஆள்கள் இன்றி தனிமையில் உயிரிழந்தார் கருப்பு சுப்பையா. நம்மையெல்லாம் இன்றும் சிரிக்க வைக்கும் கருப்பு சுப்பையாவின் நகைச்சுவைகளுக்குள் இவ்வளவு பெரிய வலி இருந்திருக்கிறதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *