எனக்கே புதுசா இருக்கு.. பிக்பாஸ் அனிதாவை பற்றி புட்டு புட்டு வைத்த கணவரின் பதிவு!

Cinema

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.
ஆரம்பத்தில் இருந்தே இவர் மக்கள் மத்தியில் வரவேற்பு வெறுப்பு என இரண்டையும் சமமாக பெற்று வருகிறார்.
இவர் பிக்பாஸ் ஷோவிற்கு வர சிறிது நாட்களுக்கு முன்னர் தான், திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் அனிதாவை பற்றி அவரது கணவர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், காதலித்த நாட்களில் கூட இத்தனை நாள் அனிதாவை பார்க்காமல் இருந்ததில்லை.அவரை பார்க்காமல் 30 நாட்கள் ஆகிவிட்டது. இது எனக்கே புதியதாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய செல்லம்மாவை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி ஒன்றை போட்டிருந்த அனிதா சம்பத்தின் கணவர் ‘ஆமா அவ ரொம்ப ஷார்ட் டெம்பரான பொண்ணு அவளால சின்ன சின்ன இன்சல்டட் கூட தாங்கிக்க முடியாது.
மூஞ்சிக்கு நேரா கேட்டுவா. யாராவது ஹர்ட் பண்ணிட்டா அதை ஈசியா மறந்துட்டு அவளால அவங்க கிட்ட பேச முடியாது. நல்லா நடந்துகிட்டா சின்னவங்க கிட்ட கூட அவ மரியாதையாக இருப்பா.ஆனால் பிரச்சனை பண்ணி சண்டை போட்டா, இன்சல்ட் பண்ணி பேசிட்டா பெரியவங்கள இருந்தாலும் மதிக்க மாட்டா. அவ அவளா இருக்கா.


இது ஒரு ஷோ இந்த ஷோவ பத்தி என்ன வேணும்னாலும், யார் வேணாலும் கமெண்ட் பண்ணலாம் இவங்களை பற்றியும் கமெண்ட் பண்ணலாம்.ஆனா அவங்க எல்லாமே பொய் சொல்றாங்க ஷோகாக சிம்பதிக்காக சொல்றாங்கன்னு சொல்ற சில பேருக்கு சொல்லிக்கிறேன்.அம்மாவ பத்தி சொன்னது 100% உண்மை நாங்க லவ் பண்ண புதுசில இருந்தே என் கிட்ட சொல்லி பீல் பண்ணி இருக்கா. என் அம்மா கருப்பா இருப்பாங்க அதனால எங்கேயும் வர மாட்டாங்கன்னு.அவ எல்கேஜி ல இருந்து ஸ்டேஜ் எத்தனையோ அவார்டு வாங்கிட்டு இருக்கா. ஆனால் ஒரு இடத்துக்கும் அம்மா வரல இப்ப வரைக்கும் எந்த ஃபங்ஷனுக்கு கூட வர மாட்டாங்க ஒரு பொண்ணு புடிக்க, லவ் பண்ண எது வேணாலும் காரணமாக இருக்கலாம்.

எனக்கு அப்படி அனிதாவை எனக்கு புடிச்சது காரணமே அவ அவங்க ஃபேமிலிய கேர் பண்ணி பாத்துகிட்டது தான்.மேலும், உண்மையா அனிதா கிட்ட அவங்க ஃபேமிலி கிட்ட இருக்கு எல்லாமே அனிதா ஒரு ஒரு ரூபாய் சேர்த்து வச்சு வாங்கினது தான் எதுவுமே இல்லாமல் இருந்து இப்ப எல்லாமே இருக்கின்ற அளவுக்கு ஆக்குனது அவ மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *