நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபரான கெளதம் கிச்சுவை கடந்த 30-ம் தேதி மும்பையில் திருமணம் செய்துகொண்டார்.அதன் பின்னர், காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த காஜல் அகர்வால். இணையத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வருகிறார்.திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார்.
மேலும், ஆடம்பர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக காஸ்ட்லி ஹனிமூனை என்ஜாய் செய்து வருகிறார். இந்த ஹனிமூனுக்கு ரூ.40 லட்சத்தை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால், ஹனிமூனை என்ஜாய் செய்வதை விட அதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதையடுத்து, கடலுக்கு அடியில் காதல் கணவருடன் நீச்சலடிக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். அதில், நீச்சல் உடையில் பார்க்க ஸ்கூபா டைவ் செய்வது போன்று உள்ள இந்த போட்டோஸ் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் வாயடைத்தே உள்ளனர்.