ஆயுத எழுத்து சீரியல் வில்லி மெளனிகா வாழ்வில் இவ்வளவு சோகமா? வில்லியின் நிஜவாழ்வை கேட்டால் கண்ணீரே வந்துவிடும் !!

Cinema

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.


அந்தவகையில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் மௌனிகா.இவர் அறிமுகமானது வெள்ளித்திரையில் தான் அனால் பிரபலமானது சின்னத்திரையில்.உன் கண்ணில் நீர் வழிந்தால் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.பின்னர் இயக்குனர் பாலுமஹேந்திராவை திருமணம் செய்துகொண்டார்.சொர்க்கம் என்ற சீரியலில் நடித்தற்காக இவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. பாலுமகேந்திராவின் மறைவிற்கு பிறகு அதிகமாக எங்கும் தலை காட்டாமல் இருந்த மௌனிகா தற்போது ஆயுத எழுத்து சீரியலில் வில்லியாக நடித்துவருகிறார்.


இப்போது அவர் தன் வாழ்க்கை குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், ‘என்னோட வீட்டுக்காரர் மறைவுக்கு பின்பு வாழ்க்கையே சூனியம் ஆகிட்ட மாதிரி ஒரு உணர்வு. காலம்தான் கொஞ்சம், கொஞ்சமா மீட்டு கொண்டு வந்துச்சு. பாலுமகேந்திராவின் மறைவுக்கு பின்பு எனக்கு லைப்ல பிடிப்பு உண்டாக காரணமா இருந்ததே என்னோட சகோதிரி மகள்தான்.என்று கூறியுள்ளார்.

ஆனா என்னோட துரதிஷ்டம் என்னன்னா…அவ ஒரு ரோட் ஆக்ஸிடண்ட்ல இற ந்துட்டா. எனக்கு குழந்தை இல்லாத குறையை போக்குனதே அவதான். அவ சின்னப்பிள்ளையா இருந்தகாலம் முதல் கல்யாணம் முடிஞ்சு அவளுக்கு இரண்டு பிள்ளைகள் கூடவே இருந்து பார்த்தேன்..ஆனா!’என்ற மெளனிகா மேற்கொண்டு பேசமுடியாமல் தடுமாறுகிறார்.மேலும் அவர்கள் நினைவிலிருந்து வெளியே வரவே சன் டிவி சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *