குத்தாட்டம் போடும் ராட்சசன் பட நடிகை ரவீனா ! என்ன குத்து டா சாமி இவரா இப்படி அதிர்ச்சியில் ரசிகர்கள் வீடியோ

Cinema

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன் அதில் அம்மு அபிராமி பள்ளி மாணவியாக சிறப்பாக நடித்திருப்பார் . அதேபோல அந்த படத்தில் சில காட்சியில் மட்டும் கண்களில் கண்ணாடியுடன் ஒரு இளம் பெண் பள்ளிமாணவியாக நடித்திருப்பார் அவர் தான் ரவீனா தாஹா இவருக்கு இப்போது 17 வயதே ஆகிறது . ராட்சசன் படத்தில் இவர் நடித்தது 1-2 காட்சிகள் என்றாலும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருப்பர்

இவரின் முதல் படம் எது தெரியுமா ? 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படம் தான் . அதில் வெடிவிபத்து நடைபெறும் அப்போது விஜய் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வருவார் அது ரவீனா தான் . அதன் பின்னர் தான் ராட்சசன் படத்தில் இவர் நடித்துள்ளார்

இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பூவே பூ சூடவா” என்ற தொடரில் நடித்துவருகிறார் ரவீனா. சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் ஒரு மேடையில் ரவீனா குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி இப்போது வைரலாக பரவி வருகிறது . அதில் சற்றும் தளர்ந்து போகாமல் ரவீனா குத்தாட்டம் போடுவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது . அந்த வீடியோ உங்களுக்காக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *