பிக்பாஸ் பாலா வெளியே வந்ததும் பாயும் அதிரடி வழக்கு.. 1 கோடி கொடுக்கவேண்டும் ஜோ மைக்கேல் புகார்

Cinema

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு தற்போது சுவாரசிய போட்டியாளராக வலம் வருபவர் தான் பாலாஜி முருகதாஸ்.இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஆரம்பத்தில் சக போட்டியாளரான சனம் ஷெட்டியுடன் வாக்குவாதத்தில், ஜோ மைக்கேல் பிரபல மாடலிங் நிறுவனம் ஒன்றை டுபாக்கூர் கம்பெனி என கூறினார். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்திற்கு சம்மந்தமான திரு.ஜோ மைக்கில் பிரவின் என்பவர் மானநஷ்ட ஈடு கேட்டு அவருடைய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும், பிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாகவும்,

பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *