தன்னுடைய சட்டையை நண்பருக்கு பரிசாக கொடுத்த நடிகர் விஜய்! 8 வருஷத்துக்கு பின் சஞ்சீவ் செய்த நெகிழ்ச்சி செயல்

Cinema

சஞ்சீவ் பல திரைப்படங்களில் விஜய்க்கு நண்பராக நடித்துள்ளாா். அவர் 2002 ஆம் ஆண்டில் மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி துறையில் நுழைந்தார். பல எதிர்மறை மற்றும் ஆதார கதாபாத்திரங்களை செய்த பிறகு, திருமதி செல்வம் (2007-2013) என்ற தொடாில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாா். அவர் அந்த நிகழ்ச்சியில் அபிதாவுடன் நடித்தார், அது எஸ். குமரன் இயக்கத்தில் விகடன் டெலிவிஸ்டாசு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 2009 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது மற்றும் திருமதி செல்வத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்பம் விருது ஆகிய விருதுகளைப் பெற்றாா்.

நடிகரும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், விஜய்யுடனான ஃப்ரெண்ட்ஷிப் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அண்மையில் விஜய் அனிந்திருந்தது போன்ற சட்டையை சஞ்சீவ் போட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்தது.இது குறித்து பதிவிட்ட சஞ்சீவ்,

இந்த சட்டையை நண்பன் விஜய் எனக்கு வேலாயுதம் படத்தின் சமயத்தில் கொடுத்தார்.
8 வருடங்களுக்கு பிறகும் எனக்கு பக்காவாக செட் ஆகிறது. நண்பேன்டா” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்களின்லைக்ஸ் குவிந்து வருகிறது. குறித்த புகைப்படத்தினையும் தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *