திடீரென Quarantine-ல் இருந்து வெளியேறிய வைல்ட் எண்ட்ரி அஸூம்; காரணம் என்ன? எப்போது வருவார் தெரியுமா?

Cinema

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 50 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக, அர்ச்சனா, சுசித்ரா அனுப்பட்டார்கள்.ஆனால், அதில் சுசித்ரா கடந்த வாரம் வெளியேறி இருந்தார். அப்போது அடுத்த வைல்ட் எண்ட்ரியாக ஷிவானியின் முன்னாள் காதலர் அஸூம் வருவார் என செய்திகள் வைரலாகின.இந்த நிலையில், ஒரு வாரம் கடந்த நிலையில் அஸூம் வராத நிலையில் என்ன ஆயிற்று என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், சில தினங்களுக்கு முன்னர் அவர் ஹோட்டலில் இருந்து வெளியேறியதாகவும் அவரை பிரபல மருத்துவ மனைகளில் சிலர் பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகின.இதற்கான காரணம் குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்று ஆராய்ந்த போது அஸூம் அவர்களின் தயாருக்கு உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும்,

மருத்துவர் அஸூம் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். இந்த தகவல் அஸூமுக்கு தெரிய வரவே அவர் ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளார்.தற்போது அவரது தாயார் உடல் நலத்துடன் இருக்கிறார். இதனால், திட்டமிட்டபடி அஸூம் இந்த வார சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *