கோலிவுட் சினிமா துறையில் அறிமுகமாகி நடிகைகள் தங்களது முதல் படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கே செல்பவரும் உண்டு.அதே போல் பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமா துறையை விட்டு விலகுவதும் உண்டு.அந்த வகையில் பல நடிகைகள் சினிமா துறையில் தங்களது திறமையை நிரூபிக்க முடியாமல் சினிமாவை விட்டு சென்று விடுகிறார்கள்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் மக்களிடையே தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இவர் தனது முதல் படமான முனியாண்டி விளங்கயில் மூன்றாம் ஆண்டு படம் மூலம் அறிமுகமாகி தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் படிபடியாக வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
நடிகை பூர்ணா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா மொழி சினிமா துறையிலும் படங்களை நடித்துள்ளார்.அண்மையில் நடிகை பூர்ணா அவர்கள் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தனது திருமணத்தை பற்றி தொகுப்பாளர் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த நடிகை என்னை துபாய் தொழிலதிபர் குடும்பம் பெண் கேட்டு வந்தார்கள்.அதன்பின் அவர்கள் போலியானவர்கள் என தெரிய வந்தது.மேலும் அவர்கள் பெண்களை மிரட்டி பணம் புடுங்கும் கும்பல் என தெரிய வந்துள்ளது.பிறகு போலீசாரிடம் பபுகார் அளித்துள்ளேன்.மேலும் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.“இந்த சம்பவத்தால் எனக்கு தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார்.நாங்கள் திருமணத்திற்கு முன்பே எப்படி இருக்க வேண்டும் என பேசியுள்ளோம்,அனால் அது போலி கும்பல் என தெரிந்தவுடன் சற்று ஏமாற்றம் அடைந்தேன்.திருமணம் என்றாலே எனக்கு பயமாக உள்ளது என கூறியுள்ளார்.