அடேங்கப்பா கப்பலா இது? தீவு மாதிரி இருக்குதே… இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

Cinema

கப்பல் ஒன்று தீவு போல் இருக்கும் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. பொதுவாக ஏதாவது ஒரு தீவுக்குச் செல்ல கப்பலில் போவார்கள். ஆனால் இங்கே கப்பலே ஒரு தீவு போல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘யாட் ஐலண்ட் டிசைன் கம்பெனி’ என்னும் நிறுவனம் இந்தக்கப்பலை கடந்த 2012ம் ஆண்டில் இருந்து இயக்கி வருகிறது. இந்தக் கப்பலில் மரங்கள், ஓய்வுக்கு குடிசை அறைகல் என பார்க்கவே ஒரு குட்டித்தீவை கடலில் கப்பல் என விட்டதுபோல் மிரட்டுகிறது. இந்தக்கப்பலின் நீளம் 90 மீட்டர். இது 15 நாட்ஸ் வேகத்தில் செல்லும்.

இந்தக்கப்பலை பார்ப்பவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகின்றனர். காரணம் இந்த கப்பலில் சின்ன, சின்ன குடில்கள், சாய்வு நாற்காலிகள், நீச்சல் குளங்கள், தென்னைமரங்கள் என ஒரு தீவுக்கே உரிய சகல அம்சங்களும் உள்ளது. இந்தக்கப்பலின் படங்களே மிரட்டுகிறது. அப்போ கட்டணத்தைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதுவும் ரொம்பக் கூடுதல்தான். இதோ நீங்களே இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *