சீரியலில் அண்ணி சுஜிதாவால் ஏமாற்றப்பட்ட சித்ரா… கேள்வி கேட்டு வெளியிட்ட காணொளி

Cinema

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை கூடிய விரைவில் எடுத்து வைக்கிறார் சித்ரா. இந்த இடத்திற்கு சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி, அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.சித்ரா ஆரம்பத்தில் குடிசை வீட்டில் இருந்ததாகவும் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலமா அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இப்போது சொந்தமாக வீடு கட்டி தனது பெற்றோர்களுடன் வாழ்ந்த நிலையில், இவர் முதன்முதலாக மக்கள் தொலைக்காட்சியில் தான் வேலை செய்தார்.இவர் இன்ஸ்டாவில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு அதகளப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி, சுஜிதாவை கலாய்த்து அவர் வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *