ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆடு.. தலைகீழாக சென்ற மீட்கும் இளைஞர்.. வைரலாகும் வீடியோ மிஸ் பண்ணாமல் பாருங்க பாராட்ட நினைத்தால் பாராட்டுகள்

0

கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்து மீட்க முடியாத நிலையில் உ யிரிழந்த சம்பவம் நாட்டையே உ லுக்கியது. அந்த நிகழ்வுக்குப் பின்பும் நாடு முழுவதும் ஆழ்துளைகளில் விழும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன. இந்நிலையில், வயல்வெளியில் சுற்றித் திரிந்த ஆட்டு ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை எந்தவிதமான எந்திரங்களும் இல்லாமல் சில இளைஞர்கள் கூடி புத்திசாலித்தனமாக மீட்டுள்ளனர்.

அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோ ஏற்கெனவே வெளியான பழைய வீடியோதான். இருப்பினும் அதனை நெட்டிசன்கள் அதிகம் பரப்பி வருகின்றனர்.

அதில், அசாம் மாநிலம் காவல்துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஹர்தி சிங் இந்த வீடியோவை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். “இந்தியர்கள் பாணியில் மீட்கப்பட்டுள்ளது! உறுதியான மனநிலை, கூட்டான வேலை மற்றும் தைரியம் ”என்று எழுதினார். மேலும் அவர் வீடியோவை கடைசி வரை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

அந்த வீடியோ பதிவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்க ஒரு இளைஞரை தலைகீழாகக் குழிக்குள் அனுப்புகின்றனர். உள்ளே செல்லும் இளைஞரின் காலை இருவர் பிடித்துக் கொள்கின்றனர். அவர் தொங்கியபடி உள்ளே சென்று ஆட்டை பிடித்ததும் சரசரவென்று இளைஞரை மேலே இழுக்கின்றனர். ஆடு அவருடன் வெளியே வந்து துள்ளிக் குத்து ஓடுகிறது.

இதுவரை இந்த வீடியோ 1.2 லட்சம் பார்வைகளை ஈர்த்துள்ளது. பலரும் இந்த இளைஞர்களின் செயல் புத்திசாலித்தனம், கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.