நடிகர் சிம்புவின் தங்கையின் வீட்டில் நடந்த கொண்டாட்டம்! மாமாவும் ஜாலியாக இருக்கும் மாப்பிளை!!

0

தமிழ் சினிமாவின் ஆல் ரவுண்டர் இயக்குனரான டி ராஜேந்தருக்கு சிம்பு , குறளரசன் இலக்கியா என மூன்று பிள்ளைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே அதில் சிம்பு தமிழ் சினிமாவின் தற்போதைய உ ச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தம்பி குறளரசன் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார். தங்கையை சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றே.

அதனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு விஜய் டிவி யில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிம்பு சென்றிருந்தார். அப்போது தனது வாழ்வில் நடந்த பல சோ கமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட சிம்பு. ரசிகர்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்றால் எனது தங்கை இலக்கியாவும் அவரது மகனும் தான் என்று மிகவும் உ ணர்ச்சிகரமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.தனது மகன் ஜேசனுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இதில், ”ஜேசனின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டம் இது. அதுவும் அவன் மாமாவுடன்” என பதிவிட்டுள்ளார். சிம்புவின் தங்கை வெளியிட்ட இந்த Throwback புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.