40 வயதுக்கு மேலும் சித்தாரா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுக்கு காரணம் இது தானாம்.

0

46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பேட்டியளித்துள்ளார் நடிகை சித்தாரா.
கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப் புது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை, சித்தாரா.முதல் படமே ஹிட்டானதால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன, புது வசந்தம், புரியாத புதிர், படையப்பா என பல படங்கள் நடித்தார்.தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார், இவருக்கு தற்போது வயது 46. தொடர்ந்து அம்மா, அண்ணி கதாபாத்திரங்களில் சித்தாரா நடித்து வருகிறார், ஆனால் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன், அவர் என்னுடைய தந்தை.

அதனால் திருமணம் பற்றி நான் சிந்திக்கவேயில்லை, நம்முடைய வாழ்வில் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.