மனைவியின் பேஸ்புக்கை பார்த்து அதிர்ந்து போன கணவன்! அதன் பின் நடந்ததை பாருங்கள்.!.!

0

இந்தியாவில் எப்போதுமே பேஸ்புக்கில் மூழ்கி கிடந்த மனைவியை கணவன் மிகவும் மோசமான முறையில் கொன்னுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ராஜஸ்தானை சேர்ந்தவர் அஜஸ் முகமது கான். இவர் வேலை செய்த இடத்தில் நைனா மங்ளானி என்ற பெண்ணை காதலித்துள்ளார். அப்பெண்ணுக்கு ரேஷ்மா என்ற செல்ல பெயர் உண்டு.அதன் பின் ரேஷ்மாவும் இவரை காதலித்ததால், இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஏற்கனவே சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் ரேஷ்மாவை பலர் பின்பற்றுகின்றனர். திருமணத்திற்கு பின்னரும், கணவருடன் அதிக நேரம், செலவிடாமல் ரேஷ்மா செல்போன், பேஸ்புக்குமாக இருந்துள்ளார்.

இதன் காரணமாகவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒருநாள் ரேஷ்மாவின் போனை எடுத்த பார்த்த முகமது கான் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அவருடைய மனைவியின் பேஸ்புக் அக்கவுண்டை 6000-க்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர்.ஏதோ பாலோவர்கள் தானே என்று பார்த்த போது, அவர்களுடன் ரேஷ்மா அரட்டை அடித்த Chat அனைத்தையும் பார்த்து, மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் பிரச்சனை அதிகமாகவே, ரேஷ்மா கோபித்து கொண்டு, தன்னுடைய அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ரேஷ்மாவின் மீது கொண்ட பாசத்தால், முகமது அவரை தொடர்பு கொண்டு, வா இருவரும் தனியாக பேசலாம், இனி பிரச்சனை வேண்டாம் என்று அழைத்துள்ளார்.

அதன் படி ரேஷ்மாவும், கணவர் முகமதுவை பார்க்க செல்ல, ரேஷ்மாவிற்கு பிடித்த இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்றுள்ளார். இருப்பினும் ரேஷ்மா, போனில் பேஸ்புக்கில் இருந்துள்ளார்.

இதைக் கண்டு கோபத்தின் உச்சிக்கு சென்ற, முகமது, அவரிடம் இது குறித்து பேச இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் முகமது, ரேஷ்மாவை டெல்லி – ஜெய்ப்பூர் ஹைவேஸ்க்கு கூட்டி சென்று கொடூரமாக தாக்கியுள்ளார்.

அதன் பின் கழுத்தை நெரித்து, ஒரு மிகப் பெரிய கல்லை மனைவியின் முகத்தில் போட்டு கொன்னுள்ளர். இதையடுத்து மறுநாள் அந்த வழியே வந்தவர்கள் மோசமாக இறந்து கிடந்த ரேஷ்மாவை பார்க்க, உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த பொலிசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நைனாவின் நடத்தை குறித்து முகமது சந்தேகப்பட்டுள்ளார். இதனால் நைனா அவரை விவாகரத்து செய்ய விரும்பினார்.

ஆனால் அஜாஸ் அதற்கு தயாராக இல்லை.. இந்த விஷயத்தில் இருவருக்கும் பயங்கர வாதங்களும் இருந்தன. இதனால்தான் முகமதும் ரேஷ்மாவை கொலை செய்ய முடிவு செய்ததது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.